
கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்?
கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்? மருந்துகள் அதன் விளைவுகள் பற்றியெல்லாம் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரும் நண்பர் ஒருத்தர் திடீரென அழைத்து, “நீங்க கட்டாயம் விட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஓரளவு கொரானா பரவலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று சொல்கிறார்கள்” என்றார். “ஏங்க தினமும் சூரியன் எழறதே என் வெற்று உடம்பில சுள்ளுன்னு அடிக்கத்தான். நாள் முழுக்க என் மேல பட்டு கருவாடாக்காம விடாது. ஊரே வந்து குத்தவச்சு அள்ளிட்டுப் போற